×

பொன்னமராவதி ஒன்றியத்தில் 5 இடங்களில் புதிய மின்மாற்றி

 

பொன்னமராவதி,ஆக.10: பொன்னமராவதி ஒன்றியத்தில் 5 இடங்களில் புதிய மின்மாற்றியை அமைச்சர் ரகுபதி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். விவசாய மின் மோட்டார்கள் மற்றும் வீட்டு உபயோக மின் விநியோகம் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சி தச்சம்பட்டி, ஏனாதி ஊராட்சி ஜீவாநகர், தொட்டியம்பட்டி ஊராட்சி அண்ணாநகர், உசிலம்பட்டி ஊராட்சி கட்டையாண்டிப்பட்டி, காட்டுப்பட்டி ஊராட்சி ஏனவயல் ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினை தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதில் ஒன்றியக்குழுத்தலைவர் சுதா அடைக்கலமணி, தாசில்தார் சாந்தா, திருமயம் செயற்பொறியாளர் ஆனந்தாயி, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், துணை தலைவர் தனலெட்சுமி அழகப்பன், உதவிபொறியாளர் அசோக்குமார், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, ஊராட்சித் தலைவர்கள் ராமாயிமணி, முருகேசன், அழகுமுத்து, கீதாசோலையப்பன், ஆனந்தன், அழகு ராமச்சந்திரன், திமுக நிர்வாகிகள் தேனிமலை, ராமசந்திரன், சிக்கந்தர், காளிதாஸ், ஆலவயல் முரளிசுப்பையா, சாமிநாதன், இளையராஜா, பழனிச்சாமி, சுந்தரி ராமையா, விஜயலெட்சுமி, முத்தையா உட்படபலர் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி ஒன்றியத்தில் 5 இடங்களில் புதிய மின்மாற்றி appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati Union ,Ponnamaravati ,Minister ,Raghupathi ,Thirukalampur panchayat ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி ஒன்றியத்தில் 42...