×

கடலில் கரைக்க கொண்டு செல்லப்பட்டன விழுப்புரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்: எஸ்.பி. தீபக் சிவாச் தலைமையில் பாதுகாப்பு

 

விழுப்புரம், செப். 10: விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. எஸ்.பி. தீபக் சிவாச் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் சுமார் 1,500 இடங்களில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேலும் பொதுமக்களும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் வைத்து வழிபட்டனர். இதனிடையே இந்த விநாயகர் சிலைகள் 3வது நாள் அல்லது 5, 7வது நாட்களில் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 3வது நாளான நேற்று கடலூர் கடலில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன. டிராக்டர், மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்ததும் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மகாத்மாகாந்தி ரோடு, காமராஜர் சாலையின் இடதுபுறமாக சென்று மேல்தெரு, வடக்குதெரு, திருவிக வீதி வழியாக நேருஜி சாலை வந்து அங்கிருந்து கிழக்கு பாண்டி ரோடு வழியாக கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இளைஞர்கள் வண்ண பொடிகளை முகத்தில் பூசிக்கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பொதுமக்கள் தங்களின் வீடுகளில் வைத்து படைத்த சிறிய அளவிலான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் அவர்களிடம் வழங்கினர். இதனிடையே விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க எஸ்.பி. தீபக் சிவாச் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post கடலில் கரைக்க கொண்டு செல்லப்பட்டன விழுப்புரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்: எஸ்.பி. தீபக் சிவாச் தலைமையில் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,S.B. ,Deepak Shivach ,Ganesha ,SB Police ,Vinayagar Chaturthi festival ,
× RELATED விழுப்புரம் கோட்டம் சார்பில் 740 சிறப்பு பேருந்துகள் இயக்கம்