×

ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண் அக்கவுண்டில் ரூ.90 ஆயிரம் அபேஸ்

 

சிதம்பரம், செப். 10: சிதம்பரம் மின் நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகமது மன்சூர் மனைவி சமீராபேகம்(38). இவர் கடந்த 7ம் தேதி, சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஏ.டி.எம்.மில் மிஷினில் பணம் எடுக்க சென்று கொண்டிருந்தார். அப்போது சமீரா பேகத்திற்கு ஏடிஎம் மிஷினில் பணம் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.

அப்போது அங்கு வந்த சுமார் 35 மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர், அங்கு வந்து நைசாக சமீராபேகத்திடம் பேசி ஏடிஎம் மிஷினில் இருந்து பணத்தை எடுத்து தருகிறேன் என்று கூறி பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, அவருடைய ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு, சமீரா பேகத்தின் ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து கடந்த 8ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சமீரா பேகம் அக்கவுண்டில் இருந்து ரூ.90,000 பணத்தை அந்த நபர் எடுத்ததாக சமீரா பேகத்திற்கு குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த சமீரா பேகம் சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண் அக்கவுண்டில் ரூ.90 ஆயிரம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Mohammad Mansoor ,Samira Begam ,6th Cross Street, Chidambaram Min Nagar ,Chidambaram South Road ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் கோயில் வளாகத்தில்...