×

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

 

குடியாத்தம், செப்.10: குடியாத்தத்தில் முன்னாள் ராணுவவீரர் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவவீரர் முருகன். இவர் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் பஸ் நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்காக வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர், நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணியளவில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பின்புற கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது அறையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. மேலும், அதில் இருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ₹10 ஆயிரம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் திட்டமிட்டு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

The post முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Murugan ,Vallalar ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் 2 லிப்ட்கள்...