திருடுபோன பணத்தை மீட்டுத்தர கோரி மனு

விருதுநகர், ஆக.10: திருடு போன பணத்தை மீட்டு தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பாவாலியை சேர்ந்த ராஜ்குமார் அளித்த மனுவில், பாவாலியில் உள்ள எனது அம்மா வீட்டில் கடந்த மார்ச் 23 காலை 10.30 மணியளவில் ரூ.48 ஆயிரம் பணம் திருடுபோனது. ஆமத்தூர் போலீசில் மனு அளித்தேன். குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் மகேஸ்வரி என்பவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டு மார்ச் 29ல் பணத்தை கொடுத்து விடுவதாக ஒப்புக்கொண்டுள்ளார். பணத்தை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து டிஎஸ்பி அலுவலகத்தில் ஏப்.23ல் மனு அளித்து 30 நாட்களுக்கு பிறகு ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்து 100 நாட்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. திருடிய நபரே பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்ட பின்பும் போலீசார் கால தாமதம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

The post திருடுபோன பணத்தை மீட்டுத்தர கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: