தமிழ்நாடு முழுவதும் 24 கூடுதல் எஸ்.பி.க்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் 24 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: ஐகோர்ட் விஜிலன்ஸ் பிரிவு(கோவை) கூடுதல் எஸ்பியாக உள்ள மணிகண்டன், மத்திய பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், தஞ்சாவூர் தலைமையிட கூடுதல் எஸ்பியாக உள்ள ஜெயச்சந்திரன், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு-1 துணை கமிஷனராகவும், கள்ளக்குறிச்சி தலைமையிட கூடுதல் எஸ்பியாக உள்ள குத்தாலிங்கம், சென்னை தி.நகர் துணை கமிஷனராகவும், ஐகோர்ட் விஜிலன்ஸ் பிரிவு(மதுரை) கூடுதல் எஸ்பியாக உள்ள விஜயகுமார், திருநெல்வேலி கிழக்கு நகர சட்டம் ஒழுங்கு துணை கமினராகவும், எஸ்பிசிஐடி கூடுதல் எஸ்பி கார்த்திகேயன், சென்னை தீவிரவாதிகள் ஒழிப்பு பிரிவு எஸ்பியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பியாக உள்ள சங்கு, போச்சம்பள்ளி 7வது பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும், திருநெல்வேலி சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பி கார்த்திகேயன், பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், தேனி சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பி கார்த்திக், பழனி 14வது பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பியாக உள்ள இனிகோ திவ்யன், சிவில் சப்ளை சிஐடி(மதுரை) எஸ்பியாகவும், கடலூர் தலைமையிட கூடுதல் எஸ்பி அசோக்குமார், கோவை போக்குவரத்து துணை கமிஷனராகவும், ராமநாதபுரம் தலைமையிட கூடுதல் எஸ்பியாக உள்ள அருண், மணிமுத்தாறு 12வது பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வந்த தேவநாதன், லஞ்ச ஒழிப்புத்துறையில் மேற்கு மண்டல எஸ்பியாகவும், கோவை தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த முத்துக்குமார், புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், திருவாரூர் தலைமையிட கூடுதல் எஸ்பி ஈஸ்வரன், சென்னை சைபர்கிரைம் கூடுதல் எஸ்பியாகவும், கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பி கோமதி, சென்னை டிஜிபி அலுவலக உதவி ஐஜியாகவும், நாகப்பட்டினம் கடலோர காவல்படை கூடுதல் எஸ்பி மீனாட்சி, சென்னை சைபர் க்ரைம் துணை கமிஷனராகவும், பெரம்பலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாக உள்ள வேல்முருகன், சேலம் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ஐகோர்ட் விஜிலன்ஸ்(கடலூர்) பிரிவு கூடுதல் எஸ்பியாக உள்ள முத்தமிழ், ஆவின் விஜிலன்ஸ் எஸ்பியாகவும், தாம்பரம் சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பி ஜெரினா பேகம், சென்னை சைபர் க்ரைம் துணை கமிஷனராகவும், எஸ்பிசிஐடி சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்பி ரமேஷ்கிருஷ்ணன், தீவிரவாதிகள் ஒழிப்புப் பிரிவு(மதுரை) எஸ்பியாகவும், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாக உள்ள கீதா, சேலம் தலைமையிட துணை கமிஷனராகவும், நாகப்பட்டினம் சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பி மகேஸ்வரி, தூத்துக்கடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பியாகவும், மதுரை போலீஸ் பயிற்சி பள்ளி கூடுதல் எஸ்பி ராஜேஸ்வரி, மதுரை தலைமையிட துணை கமிஷனராகவும், நாமக்கல் தலைமையிட கூடுதல் எஸ்பி கனகேஸ்வரி, பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 24 கூடுதல் எஸ்.பி.க்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: