×

3 குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாமர மக்களை வஞ்சிக்கும் 3 குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பாமர மக்களை வஞ்சிக்கும் 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார். அப்போது அவர்கள் திடீரென சட்ட நகலை தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சட்ட நகலை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து சட்ட நகல்களை பறித்துக் கொண்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post 3 குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Communist Party of India ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...