×

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை :அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணைவதாக வதந்தி பரப்புகின்றனர்.அதிமுக என்பது கடல் போன்றது; வலிமையான இயக்கம். அரசு மருத்துவமனைகளில் பல குறைகள் உள்ளதாக மக்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சினையை தீர்க்கவும் பேசவும் அரசு குழு அமைக்க வேண்டும். பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் கிராம மக்களை அழைத்து முறையாக பேச்சு நடத்த வேண்டும்.மாணவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே ஆதிதிராவிட நல விடுதிகள் குறித்து கருத்து தெரிவித்தேன். தமிழ்நாடு முழுவதும் ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் விடுதிகளை ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும். எதிர்க்கட்சி குற்றச்சாட்டு குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் குறைபாடுகளை தீர்ப்பது ஆளும் அரசின் கடமை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government ,Weidapadi ,Chennai ,Chief General Secretary ,Edapadi Palanisami ,Adimuga ,Senji Ramachandran ,Vijayin ,Tavega ,Davega ,Edappadi ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்