நன்றி குங்குமம் தோழி
உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளி பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையை தரும்.
* இதில் விட்டமின் C, A, E சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.
* வயதைக் குறைத்துக் காட்டக்கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.
* ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும்.
* பப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லாத ஆரோக்கிய உடலைப் பெறலாம்.
* பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.
* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
* இதில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லக்கூடிய தன்மை இருப்பதால், ரத்தத்தில் நோய் கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கும்.
* விட்டமின் கே, சி சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்னைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது.
* இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம்.
* அஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்ஸமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணிக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல்
பிரச்னையில் இருந்து பாதுகாக்கும்.
* சருமத்தை புத்துணர்வாக வைத்துக் கொள்வதிலும், பருக்கள் இல்லா தெளிவான முகத்தைப் பெறவும் பப்பாளி பேருதவியாக இருக்கிறது.
* பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் தடவி பின் 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவி வர முகம் பளபப்பாக மாறும்.
– அமுதா அசோக் ராஜா, திருச்சி.
The post 18 சத்துகள் கொண்ட ஒரே பழம் appeared first on Dinakaran.