மதுரை சக்கிமங்கலம் வைகை ஆற்று பாலத்தில் ரூ.8 லட்சத்தில் மின் விளக்குகள்: விரைவில் பணிகள் துவக்கம்

 

மதுரை, ஆக. 9: மதுரையில் சக்கிமங்கலம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கான பிரதான சாலையாக வைகை ஆற்று பாலம் அமைந்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் வாகன போக்குவரத்து மிகுந்த பாலமாக இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் இருந்த மின் விளக்குகள் எரியாத நிலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமமாக இருந்தது.
இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது நடவடிக்கையை தொடர்ந்து ரூ.8 லட்சத்திற்குள் மின் விளக்குகள் அமைக்க ஊராட்சி ஒன்றிய குழுவே தடையில்லா சான்று வழங்கலாம் என கலெக்டர் அனுமதித்திருந்தார். இதையடுத்து நடந்த கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில், சக்கிமங்கலம் வைகை ஆற்று மேம்பாலத்தில் ரூ.8 லட்சத்தில் மின் விளக்குகள் அமைக்க ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து,
மின் விளக்குகள் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேற்று இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின் விளக்குகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் பணிகள் துவங்கி முடியவுள்ளன.

The post மதுரை சக்கிமங்கலம் வைகை ஆற்று பாலத்தில் ரூ.8 லட்சத்தில் மின் விளக்குகள்: விரைவில் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: