சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 13 நிமிடம் தாமதம்

கரூர், ஆக. 9: மயிலாடுதுறையில் இருந்து கோவை வரை சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை பெருகமணி ரயில்வே நிலையம் வந்த போது, இன்ஜினின் முன் பக்கம் உள்ள கண்ணாடியில் மயில் அடிபட்டு தொங்கிக் கொண்டு இருந்ததை ரயில் ஓட்டுநர் எதிர்பாராத விதமாக பார்த்துள்ளார். இதனையடுத்து, அந்த ரயில் கரூர் ரயில்வே நிலையத்திற்கு 7 மணியளவில் வந்த போது, ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, இன்ஜினின் முன்பக்கத்தில் மாட்டியிருந்த மயில் அகற்றப்பட்டது.இதன் காரணமாக, கரூர் ரயில்வே நிலையத்தில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 13 நிமிடங்கள் தாமதமாக கோவை நோக்கி புறப்பட்டுச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 13 நிமிடம் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: