வாகன ஓட்டிகள் 90% தலைக்கவசம் அணிந்து செல்லும் விகிதம் இருந்த போதிலும், பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் நபர்கள் 63% மட்டுமே தலைக்கவசம் அணிந்து விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். அச்சுறுத்தும் வகையில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்களிடையே மிகக் குறைந்த விகிதத்தில் காணப்படுகிறது. மாணவர்கள் தலைக்கவசம் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நேற்று மாநில பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைக்கவசம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது.
The post சென்னையில் விபத்தில்லா விழிப்புணர்வு நாள் 1000 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம்: போக்குவரத்து காவல்துறை வழங்கியது appeared first on Dinakaran.