தென்காசி புதிய எஸ்பியாக வி.ஆர்.சீனிவாசன் நியமனம்

தென்காசி, ஆக. 9: தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக வி.ஆர். சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தென்காசி, தூத்துக்குடி, கோவை, திருவண்ணாமலை உட்பட மாநிலம் முழுவதும் காவல் துறையில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் 56 பேர் நேற்று திடீரென பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சுரேஷ்குமார் பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சென்னையில் அண்ணாநகர் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த வி.ஆர். சீனிவாசன் தென்காசி மாவட்டத்தின் புதிய எஸ்பி‌யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்காசி டிஎஸ்பி மற்றும் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையராக பணியாற்றியுள்ளார். அதே நேரத்தில் நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த ஆதர்ஷ் பச்சேரா பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.

The post தென்காசி புதிய எஸ்பியாக வி.ஆர்.சீனிவாசன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: