சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: இடதுசாரி இயக்கத்தின் முதுபெருந்தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யாஜீ மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது மாநிலத்துக்கும் நாட்டுக்கும் அவர் காட்டிய மாறாத அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் நினைவுகூரப்படும். ஓர் உறுதியான மார்க்சியவாதியாக, சமத்துவச் சமுதாயத்தை வளர்த்தெடுக்கவும் – விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் – சமூகநீதிக்காக குரல் கொடுக்கவும் தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துக் கொண்டார். அவரது தலைமைத்துவமும், மக்கள் மீதான உறுதிப்பாடும் வருங்கால தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தோழருக்கு செவ்வணக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மேற்குவங்க முன்னாள் முதல்வர் பட்டாச்சார்யாஜி மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.