தேசிய பேரிடர் மீட்புப் படையின் 14வது பட்டாலியன் கமாண்டன்ட் பல்ஜிந்தர் சிங் கூறுகையில்; “மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக NDRF குழுக்கள் இந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்திற்கு நன்கு தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படாமல் இருக்க இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தொலைதூர இடங்களுக்கு NDRF குழுக்கள் அனுப்பப்பட்டன. நடந்த சமேஜ் மேக வெடிப்பு ஒரு பெரிய பேரழிவு. இன்று காலை வரை நாங்கள் தற்போது 13 சடலங்களை மீட்டுள்ளோம். மேலும் பத்து பேரைக் காணவில்லை” என தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில், மண்டி மாவட்டத்தில் உள்ள ஜோகிந்தர் நகரில் 110 மி.மீ., மழை பதிவாகியுள்ளது எனவும் சிர்மூர் மாவட்டத்தில், அதிக மழை பெய்துள்ளது எனவும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 75 சதவீத பகுதிகளில் 30 மிமீ முதல் 50 மிமீ வரை மழை பெய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இமாச்சலப்பிரதேசத்தில் ஸ்ரீகந்த் அருகே ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.