முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம்

 

கரூர், ஆக. 7: கருர் மாவ ட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆகஸ்ட் 8ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டரால் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுக்கள் வாயிலாக இரட்டை பிரதிகளில் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: