சென்னையில் இருந்த பச்சைமுத்து மனைவி வளர்மதியும் உடன் வந்துள்ளார். காரை அமிர்தராஜ் ஓட்டினார்.நேற்று காலை 7.30 மணியளவில் மேலூர் அருகே நான்குவழிச்சாலை சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பச்சைமுத்து, அமிர்தராஜ், புலிசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வளர்மதி, பிரபாகரன் ஆகியோர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பொதுக்குழுவிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி மதிமுக நிர்வாகிகள் 3 பேர் பலியானது கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post லாரி மீது கார் மோதியதில் மதிமுக நிர்வாகிகள் 3 பேர் பலி: சென்னையில் இருந்து மேலூர் திரும்பியபோது சோகம் appeared first on Dinakaran.