லாரிகள், பாட்ரி வாகனங்கள், பொக்லைன், பாப்கார்ட், மாடு மற்றும் நாய் பிடிக்கக்கூடிய வாகனங்களை இயக்குவதற்காக 400க்கும் மேற்பட்ட நிரந்தர ஓட்டுநர்களும், ஒப்பந்தம் அடிப்படையிலும் ஓட்டுநர்களும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகள் வாகனங்கள் தவிர பெரும்பாலான இதர வாகனங்கள் களத்தில் பணி செய்யவில்லை என தொடர்ச்சியாக புகார் எழுந்தது.
மாநகராட்சியின் சில ஓட்டுனர்கள் பணியில் இருப்பதாக பதிவேட்டில் கையெழுத்திட்டு சொந்த வேலைக்காக சென்று விடுவதாகவும், அவர்கள் இயக்க வேண்டிய பொக்லைன் மற்றும் லாரிகள் முடங்கி கிடைப்பதால் தூர்வாரும் பணிகள், கழிவு, மலர் கழிவுகளை அகற்றுவது மாடு மற்றும் நாய் பிடிப்பது போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வாகனங்களை முறையாக இயக்கி கண்காணிக்க அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆயுத்த பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தி கண்காணிக்க மண்டல அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவு..!! appeared first on Dinakaran.
