தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை: தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில், மாநில தலைவர் டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி, மாநில பொது செயலாளர் வேலு மனோகரன் தலைமையில், கடந்த 1ம் தேதி சேலம் காவேரி மருத்துவமனையில் அவசர பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுமி தஷ்மிதாவை நேரில் சென்று ஆறுதல் கூறி, அவரது பெற்றோரிடம் நலம் விசாரிக்கப்பட்டது. மேலும், அச்சிறுமியின் மருத்துவ செலவுகளுக்காக அவரது பெற்றோரிடம் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னதாக, காலையில் குழந்தையின் பெற்றோரை அழைத்துக் கொண்டு, திருச்செங்கோடு காவல்துறை துணை கண்கணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று, அங்கு துணை கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை போக்சோ மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதில் மாநில இளைஞரணி பொது செயலாளர் பொட்டல் எஸ்.துரை, மாநில இணை பொது செயலாளர்கள் என்.எஸ்.சேதுமாதவன், கோவை இரா.தங்கப்பழம், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.சபாபதி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் கேலக்ஸி எம்.பாலா, மாநில இளைஞரணி செயலாளர் ஆர்.தீபன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் பவானி ஆர்.குணசேகரன், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சுப்பையா யாதவ், மதுரை மாவட்ட தலைவர் கே.ஜெயக்குமார், சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பி.எல்.பழனிசாமி, வழக்கறிஞர் ஆர்.உதயகுமார், டி.கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், கனகேந்திரன், மாதவன், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கே.சந்தோஷ்குமார், பி.சுகுமார், பி.பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சங்கர், பிரேம்குமார், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், விஷ்ணு கௌதம், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஏ.சிவசக்தி பாண்டியன், ரெட் சங்கர், ஏஆர்எஸ்.பாண்டியன், கோவை மாவட்ட பொறுப்பாளர் விகேபி.நந்தகுமார், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் சித்தேரி எம்.பெருமாள், ஆர்.கோபி, மூத்த நிர்வாகிகள் சுப்பையா, வெங்கடாசலம், சேலம் தொழிலதிபர் ஜி.ஜி.கண்ணன் திருச்செங்கோடு டாக்டர் மதன்குமார் மோகன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

The post தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: