‘வோட் ஃபார் டெமாக்ரசி’ என்ற அமைப்பு பாஜக வெற்றி பெற்ற 79 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. முதல் கட்டத்தின் இறுதி புள்ளிவிவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் 11 நாட்கள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது கட்டத்திற்கு 6 நாட்கள் மற்றும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 4 முதல் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில், வாக்குப்பதிவின் ஆரம்ப மற்றும் இறுதி புள்ளிவிபரங்களில் 1 சதவீத வித்தியாசம் மட்டுமே இருந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெறமுடியாத நிலையில், தற்போது குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதியில் வெற்றி?: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து appeared first on Dinakaran.