பருவமழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி தீவிரம்

பரமக்குடி: பரமக்குடி நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் மற்றும் சாலைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.பரமக்குடி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தில் சாலையின் பாலத்தில் உள்பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மழைநீர் சீராக செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை ஓரங்களில் உள்ள மூள்செடிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் வளைவில் உள்ள செடிகளை அகற்றுதல், சாலை ஓரங்களில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்றும் பணிகள் நடந்தது. மழை காலங்களில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் உள்ள குழிகளை மூடுதல் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, ராமநாதபுரம் மாவட்டம் கோட்ட பொறியாளர் முருகன் ஆலோசனையின்படி, வடகிழக்கு பருவ மலையை எதிர்கொள்ளவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாமல், பரமக்குடி நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் உள்ள பெரிய பாலங்கள் சிறு பாலங்கள் ஆகியவற்றின் நீர் வரத்து பகுதிகளில் உள்ள செடிகள் முட்புதர்கள் அகற்றும் பணி, மணல்மேடுகள் சரி செய்யும் பணி, பாலத்தின் மேல் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க குழாய்களில் அடைத்துள்ள மண்ணை அகற்றுதல் மற்றும் இரவு நேரங்களில் வாகனங்கள் ஆலங்களில் விபத்து ஏற்படாத வண்ணம் இருக்க பாலங்களில் கைப்பிடி சுவர் மற்றும் பக்கவாட்டில் வெள்ளை அடித்தல் பணிகளை சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர். பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பணியினை பரமக்குடி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: