கால்நடைகளுக்கான இலம்பி தோல்நோய் தடுப்பூசி முகாம்: நாளை தொடங்கி ஆக.31ம் தேதி வரை நடக்கிறது

தேனி: தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான இலம்பி தோல் நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடங்கி வரும் ஆக.31ம் தேதி வரை நடக்கிறது.தேனி மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமை இனங்களை இலம்பிதோல்நோயான பெரியம்மை நோயில் இருந்து காக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலம்பி தோல் நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடங்கி வரும் ஆக.31ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் கால்நடைகளுக்கு இலம்பி தோல் நோய் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான மாவட்டத்தில் உள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி 4 மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் சினை இல்லாத மாடுகளுக்கும் வருடத்திற்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது. எனவே, தேனி மாவட்டத்தில் நடக்க உள்ள இம்முகாம்களை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.

The post கால்நடைகளுக்கான இலம்பி தோல்நோய் தடுப்பூசி முகாம்: நாளை தொடங்கி ஆக.31ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: