இப்பூங்கா திறப்பு விழாவின்போது, வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன அனைத்து நிலப்பரப்பு வாகனங்களையும் (All Terrain Vehicles) முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், மதிவேந்தன், மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பிரபாகர ராஜா எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் ராகுல் நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
