×

3% உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: அருந்ததியினர் சங்கத்தினர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி

சென்னை: திமுக அரசால் சட்டப் பேரவையில் அறிமுகம் செய்து நிறைவேற்றப்பட்ட அருந்ததியினருக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அருந்ததியினர் சங்கத்தினர் சந்தித்து, நன்றி தெரிவித்தனர். ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, தமிழ் புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சியின் ஜக்கையன், தமிழ்நாடு சாக்கிய அருந்த்தியர் சங்கத்தின் திரு. எழுத்தாளர் மதிவண்ணன், ஆதிதமிழர் ஜனநாயக பேரவையின் பவுத்தன், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் எஸ்.டி.கல்யாணசுந்தரம், கொங்கு விடுதலை புலிகள் கட்சியின் விஸ்வநாதன், திராவிட தமிழர் எழுச்சி கழகம் தமிழ்மணி, சமூக நீதி மக்கள் கட்சி வடிவேல் ராமன், ஜெய் பீம் மக்கள் கட்சி அறிவழகன் உள்ளிட்ட 45 அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, அர.சக்கரபாணி, எம்.மதிவேந்தன், எம்பிக்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், முன்னாள் எம்பி ஆர்.எஸ். பாரதி, திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்புக்கு பின்னர், ஆதி தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் அளித்த பேட்டியில், ‘‘அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்த பெருமை முன்னாள் முதல்வர் கலைஞரையை சாரும். இட ஒதுக்கீட்டை பாதுகாத்த பெருமை தமிழக முதல்வர் ஸ்டாலினை சாரும். முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த இருக்கிறோம்’’ என்றார்.

The post 3% உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: அருந்ததியினர் சங்கத்தினர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Arunthathiyar Sangha ,Chief Minister ,CHENNAI ,Arunthas ,DMK government ,Legislative Assembly ,Arundhatiyar Sangh ,M.K.Stalin ,Chennai Anna Vidyalaya ,Arundhathiyar Sangh ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...