- OPS
- இலங்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- இலங்கை கடற்படை
- கார்த்திகேயன்
- ராமேஸ்வரம்
- மாலைச்சாமி
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜூலை 31ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல், மீனவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான படகின்மீது வேண்டுமென்றே மோதியதில் நடுக்கடலில் மூழ்கி மலைச்சாமி மற்றும் ராமச்சந்திரன் உயிரிழந்துள்ளனர். ராமச்சந்திரனின் உடல் இன்னமும் மீட்டெடுக்கப்படவில்லை.
இலங்கை அரசின் இதுபோன்ற அத்துமீறிய செயல் ஒருவிதமான பதற்றத்தை தமிழக மீனவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும், மீனவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவும், மாயமான மீனவர் ராமச்சந்திரன் உடலை மீட்டெடுத்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு இலங்கையுடன் பேசி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஒன்றிய அரசு இலங்கையுடன் பேசி தீர்வு காண ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.