டிஎன்பிஎஸ்சி இணையத்தில் துறை தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு


சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் (டிஎன்பிஎஸ்சி) தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துறை தேர்வுகள் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் ஜூன் 28ம் தேதி வரை கொள்குறிவகை, விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை உள்பட 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடந்தன. இத்தேர்வின் கொள்குறி வகை தேர்வுகளின் உத்தேச விடைகள் குறிக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துறைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வரும் 5ம் தேதி மாலை 5.45 மணி வரை, விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், வினாவின் உத்தேச விடை, வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதார்கள் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, பரிசீலிக்கப்படமாட்டாது.

The post டிஎன்பிஎஸ்சி இணையத்தில் துறை தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: