பஞ்சர் கடைகளில் இருந்து 800 பழைய டயர்கள் பறிமுதல் 4 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வேலூர் மாநகராட்சியில் ெடங்கு பாதிப்பை தடுக்க

வேலூர், ஆக.2: வேலூர் மாநகராட்சியில் டெங்கு பாதிப்பை தடுக்க பஞ்சர் கடைகளில் இருந்து 800 பழைய டயர்களை பறிமுதல் செய்து, 4 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்பை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக உள்ள பழைய டயர்களை கண்டறிந்து அகற்றும் பணிகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் வேலுார் மாநகராட்சியில் கமிஷனர் ஜானகி உத்தரவின்பேரில், மாநகர நலஅலுவலர் கணேசன் தலைமையில் 4 மண்டலங்களிலும் நேற்று பழைய டயர்களை கண்டறிந்து அகற்றும் பணி நடந்தது. இதில் சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். பஞ்சர் கடைகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் பறிமுதல் செய்தனர். அத்துடன் 4 கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகரிகள் கூறுைகயில்,‘ பழைய டயர்களில் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க பழைய டயர்களை பறிமுதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு பழைய டயர்களை வைத்திருக்க வேண்டாம என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்றனர்.

The post பஞ்சர் கடைகளில் இருந்து 800 பழைய டயர்கள் பறிமுதல் 4 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வேலூர் மாநகராட்சியில் ெடங்கு பாதிப்பை தடுக்க appeared first on Dinakaran.

Related Stories: