கேழ்வரகு மிச்சர்

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 2 கப்
வேர்க்கடலை – 1/4 கப்
மிளகாய்த்தூள்- 4 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1/4 கப்
எண்ணெய் பொறிக்க – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். அதில், தேவையான உப்பு அரைத்து சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
அந்த மாவை மிக்சர் பிழியும் நாழியில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், தலா 50 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரித்த அவல் சேர்த்து கிளறவும். கேழ்வரகு மிக்சர் ரெடி!

The post கேழ்வரகு மிச்சர் appeared first on Dinakaran.