சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் ஃபாஸ்டேக் முறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் இன்று முதல் அமல்

சென்னை: சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் ‘ஃபாஸ்டேக்’முறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சுங்கக்கட்டணம் செலுத்தும்போது காத்திருப்பதை குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும் ஃபாஸ்டேக் முறை கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது.

இதன்படி, தேசிய பேமண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ.,) மூலம் வழங்கப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்படு, அதன் வாயிலாக, நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பாஸ்டேக் சேவையை, பல்வேறு வங்கிகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பண பரிவர்த்தனை வாரியம், ஃபாஸ்டேக் தொடர்பான சில புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, “பாஸ்டேக் பயன்படுத்துவோர், கே.ஒய்.சி. எனப்படும் தங்களுடைய சுயவிபரக் குறிப்புகளை கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.

வரும், அக். 31க்குள் இந்த விபரங்களை, பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற்று பதிவேற்ற வேண்டும். அவ்வாறு கே.ஒய்.சி அப்டேட் செய்யாத பாஸ்டேக் செல்லாததாகிவிடும். கடந்த 3 முதல் 3 ஆண்டுகளுக்குள் பாஸ்டேக் வாங்கியவர்கள் கே.ஒய்.சி அப்டேட் கட்டாயம் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன் பாஸ்டேக் வாங்கியிருந்தால், அதனை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும். வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண்களை பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஃபாஸ்ட் டேக்கும் கண்டிப்பாக வாகனத்தின் உரிமையாளரின் மொபைல் போன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஃபாஸ்ட் டேக் வழங்கும் நிறுவனங்கள் வாகங்களில் தெளிவான முகப்பு மற்றும் பின்புற புகைப்படங்களை அப்டேட் செய்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் ஃபாஸ்டேக் முறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் இன்று முதல் அமல் appeared first on Dinakaran.

Related Stories: