தனி கோஷ்டியாக வந்த பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள்

புதுச்சேரி, ஆக. 1: புதுவை சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், தலைமை செயலரின் உத்தரவுக்கிணங்க முதல் நாளிலேயே அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் சபை நடவடிக்கைக்காக ஆஜராகி இருந்தனர். சபைக்கு தனிகோஷ்டியாக பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்த நிலையில், முதல்வரிடம் அமைச்சர் திருமுருகன், பாஜக எம்எல்ஏ ரிச்சர்டு ஆகியோர் காலை தொட்டு ஆசி பெற்றனர். புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபைக்கு வந்தனர். அதேபோல் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரே அணியாக சபைக்குள் நுழைந்தனர். அதேபோல் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களான கல்யாணசுந்தரம், அங்காளன், ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட்ஸ், கொல்லப்பள்ளி னிவாஸ், சிவசங்கரன் உள்ளிட்டோர் தனி கோஷ்டியாக சட்டசபைக்கு வந்தனர். அப்போது பாஜக எம்எல்ஏக்கள் தங்களது தோளில் கட்சித் துண்டு அணிந்து வந்திருந்தனர். முதல்வர் சபைக்குள் நுழைந்தபோது பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள் அனைவரும் நுழைந்தனர்.

முதல்நாள் கவர்னர் உரை இடம்பெற்ற நிலையில் அனைத்து உறுப்பினர்களும் சபைக்கு வந்திருந்தனர். தலைமை செயலரின் உத்தரவுக்கிணங்க சபை தொடங்கிய முதல் நாளிலேயே அரசு செயலர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் சபை நடவடிக்கையில் ஆஜராகி இருந்தனர்.புதிய அமைச்சரான முதல்வர் ரங்கசாமியின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்ற திருமுருகன், தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் வரிசைக்கான 5வது இருக்கையில் அமர்ந்தார். இதேபோல் பாஜக எம்எல்ஏ ரிச்சர்டும் முதல்வரின் காலை தொட்டு ஆசிபெற்றார். அரசு கொறடா ஏகேடி ஆறுமுகத்துக்கு அடுத்த இருக்கையானது சந்திர பிரியங்காவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

The post தனி கோஷ்டியாக வந்த பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.

Related Stories: