மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் விலை ரூ. 30 குறைந்து ரூ.6,385க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

இதனிடையே கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி குறைப்பை அறிவித்தார். இதன் எதிரொலியாக கிட்டதட்ட ரூ.4000 வரை தங்கம் விலை சரிந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.51,080க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.51,320க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.6,415க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6385 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.89க்கு விற்பனையாகிறது.

The post மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: