மாவட்ட கைப்பந்து போட்டி தொண்டி பள்ளி முதலிடம்

தொண்டி, ஜூலை 30: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொண்டியில் நடைபெற்றது. முதல் பரிசை தொண்டி பள்ளி பெற்றது. தொண்டி பேரூராட்சியில் அமீர் சுல்தான் அகாடமி மைதானத்தில் பள்ளியின் தாளாளர் அப்துல் ரவூப் நிஸ்தார் தலைமையில் அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடினர்.

விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக அல்-ஹிலால் பள்ளி தாளாளர் அகமது இப்ராஹிம், முணவ்வரா பள்ளி தாளாளர் சலாமத் ஹுசைன் மாற்றும் ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம் மாவட்ட துணைத் தலைவர் சாதிக் பாட்சா ஜிப்ரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு பள்ளி விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு அமிர் சுல்த்தான் அகடாமி பள்ளியும், கீழக்கரை ஹமிதியா பள்ளி விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதி ஆட்டத்தில் தொண்டி அமீர் சுல்தான் அகடமி பள்ளி வெற்றி பெற்று முதல் பரிசு சுழற்கோப்பை மற்றும் நினைவு பரிசை பெற்றனர். இரண்டாம் இடம் கீழக்கரை ஹமீதியா பள்ளி மாணவர்கள் பெற்றனர். பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் வழங்கினார். பள்ளி ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.

The post மாவட்ட கைப்பந்து போட்டி தொண்டி பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: