பாரிஸ்: உலகமே ஆவலோடு எதிர்பார்த்த 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் விழாவுடன் தொடங்கியது. இந்தியா சார்பில் சரத் கமல் மற்றும் பி.வி.சிந்து தேசியக்கொடியை ஏந்திச் சென்றனர். இந்தியா சார்பில் துப்பாக்கிச்சுடுதல், தடகளம் உள்ளிட்ட 16 விளையாட்டுகளில் 117 பேர் களமிறங்குகின்றனர்.