தமிழகத்தில்தான் பொது விநியோக திட்டம் சிறப்பாக உள்ளது 150 முதல் 200 கார்டு வைத்திருக்கும் ஊர்களில் பகுதிநேர ரேஷன் கடைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

காரியாபட்டி: ‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 150 முதல் 200 கார்டு வைத்திருக்கும் ஊர்களில் பகுதிநேர ரேஷன் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்’ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் நேற்று புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: பொது விநியோக திட்டத்தில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் பொது விநியோக திட்டம் முறைப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் அரிசி மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் அரிசியுடன் பருப்பு, கோதுமை போன்ற பொருட்கள் இணைந்து கிடைத்து வருகிறது. 150 முதல் 200 கார்டு வைத்திருக்கும் ஊர்களில் பகுதிநேர ரேஷன் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

The post தமிழகத்தில்தான் பொது விநியோக திட்டம் சிறப்பாக உள்ளது 150 முதல் 200 கார்டு வைத்திருக்கும் ஊர்களில் பகுதிநேர ரேஷன் கடைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: