காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய ஆட்சியின் சாதனைகளை ஆயிரம் அண்ணாமலைகள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2004 முதல் 2014 வரை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வளம் சேர்த்த திட்டங்கள் குறித்து பட்டியலிட விரும்புகிறேன்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் அறிமுகம், 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி பெறுகிற உரிமை, அன்றைய 120 கோடி மக்களில் 81 கோடி பேருக்கு உணவு தானியங்கள் வழங்கும் உணவு பாதுகாப்புச் சட்டம், அரிசி, சர்க்கரைக்கு மானியம், விவசாயிகளுக்கு கடன் என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி 10 ஆண்டு கால ஆட்சியில் 14 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி சாதனை படைத்தது.

இப்படி எண்ணற்ற சாதனைகளை அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தியதை ஆயிரம் அண்ணாமலைகள்(பாஜ) ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய ஆட்சியின் சாதனைகளை ஆயிரம் அண்ணாமலைகள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: