திருச்செந்தூரில் அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகள் பறிமுதல்

திருச்செந்தூர் ஜூலை 26: திருச்செந்தூர் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனர். திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் (பொறுப்பு) விநாயகம் ஆலோசனையின் பேரில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சாத்தான்குளம் அடுத்த பன்னம்பாறை விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த 3 டாரஸ் லாரிகளை சோதனை செய்தனர். வெளிமாநில பதிவெண் கொண்ட 3 லாரிகளும் லோக்கல் பர்மிட் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லோக்கல் பர்மிட் மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்ததற்காக லாரிகளை பறிமுதல் செய்து திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தெரிவித்தார்.

The post திருச்செந்தூரில் அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: