பென் டிரைவில் உள்ள தரவுகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,’நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள்? என்று கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு அமலாக்கத்துறை வக்கீல் நேரடியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து, நீதிபதிகள், நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள்.
மேலும் நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி அதற்கு நாங்கள் உங்களிடம் சுற்றி வளைக்காமல் நேரடியான சாதாரண பதிலை தான் எதிர்பார்க்கிறோம் அதற்கு கூட அமலாக்கத்துறையால் பதிலளிக்க முடியாதா. குறிப்பாக தற்போதெயெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால் அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறீர்கள் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம் ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்க மாட்டேன் என்கிறீர்கள்.
கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் தொடர்பான தடயவியல் பரிசோதனை ஆவணங்கள் எங்கே என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். உங்களிடம் இன்றைய தினம் (நேற்று) இது சம்பந்தமாக பதில் இல்லை என்றால் நாளை வாருங்கள் பதிலோடு வாருங்கள் விசாரிப்போம் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
The post ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.