சித்தூர் : பூங்காவை அதிகாரிகளுடன் சென்று ஆணையர் அருணா திடீரென ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் பூங்காவை முறையாக பராமரிக்க உத்தரவிட்டார். சித்தூர் மாநகராட்சி ஆணையர் அருணா சித்தூர் -வேலூர் சாலையில் உள்ள கங்கினி ஏரி அருகே உள்ள பூங்காவை நேற்று அதிகாரிகளுடன் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பூங்கா அருகே உள்ள கடைகள் மற்றும் பூங்காவை ஆய்வு செய்தார். பூங்கா அருகே உள்ள கடையை ஆய்வு செய்தபோது சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ₹5000 அபராதம் விதித்தார்.
திறந்த உடற்பயிற்சி கூடத்தில் பழுதுபார்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தூய்மையாக பராமரிக்காதது, குப்பை தொட்டிகள் அமைக்காதது குறித்து பூங்கா பராமரிப்பு அதிகாரியை கண்டித்தார். அதன்பின், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆய்வு செய்யப்பட்டது. திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில் பழுதடைந்த பொருட்களை விரைவில் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
குளத்திற்கும், பூங்காவிற்கும் இடையே உள்ள வேலியை சீரமைத்து, சேதமடைந்த ஓடுகளை மாற்ற வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் அவ்வப்போது பழுது நீக்கி, முறையாக பராமரிக்க வேண்டும். பூங்காவின் உள்ளேயும் வெளியேயும் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி அனில்குமார் நாயக், மேலாளர் கோபாலகிருஷ்ண வர்மா, துப்புரவு ஆய்வாளர் அமர்நாத ரெட்டி மற்றும் வார்டு செயலாளர்கள் பலர் பங்கேற்றனர்.
The post பூங்காவை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு சுகாதாரமற்ற உணவுகளை விற்ற கடைக்காரருக்கு ₹5000 அபராதம் appeared first on Dinakaran.