சாத்தூர், ஜூலை 24: சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் பாசன கண்மாய்களில் வண்டல் மண் எடுத்துகொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் பொதுபணித்துறை பாசன கண்மாய்களில் மட்டுமே மண் எடுத்துக்கொள்ள அனுமதியளித்துள்ளனர்.
கண்மாய்கள் அதிக தூரத்தில் உள்ளதால் மண் எடுத்து வரும் வாகனங்களுக்கு வாடகை அதிகளவில் உள்ளது. ஆகவே விளை நிலங்கள் அருகில் இருக்கும் ஊராட்சி கண்மாய்களில் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும் என கோட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்தார். கூட்டத்தில் வருவாய், வனத்துறை, தோட்டக்கலை விவசாய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களின் துறையின் மூலம் வழங்கப்படும் சேவைகளை தெரிவித்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் செய்திருந்தார்.
The post சாத்தூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.