வரும் 27-ம் தேதி பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக அரசு ஆத்திரத்தில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை.

‘தமிழகம் குறித்து எந்த சிந்தனையும் பாஜக அரசுக்கு இல்லை என்பதையே பட்ஜெட் காட்டுகிறது. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய பாஜக அரசின் நிதி நிலை அறிக்கையில் நீதி இல்லை; அநீதி மட்டுமே உள்ளது. பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யாமல் பெயரளவுக்கு வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவது நாட்டின் கூட்டாண்மை தத்துவத்திற்கு எதிரானது. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள்.

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.

The post வரும் 27-ம் தேதி பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: