தங்கம் விலையில் மாற்றம் சவரன் ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்தது. தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதிரடியாக அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள் 18ம் தேதி தங்கம் விலை பெயரளவுக்கு சவரன் ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.55,240க்கு விற்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,875க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,835க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.680 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post தங்கம் விலையில் மாற்றம் சவரன் ரூ.320 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: