பிராந்திய கட்சிகளின் வருமானத்தில் தெலங்கானாவின் பிஆர்எஸ் முதலிடம்: 2022-2023ம் ஆண்டில் ரூ.737 கோடி நிதி குவிந்தது

புதுடெல்லி: கடந்த 2022-2023ம் ஆண்டில் பிராந்திய கட்சிகளின் வருமானத்தில் தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சி ரூ.737.67 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 39 பிராந்திய கட்சிகளின் நிதி குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘‘தெலங்கானாவின் பாரதிய ராஷ்டிரா சமிதி(பிஆர்எஸ்) கட்சி முதலிடம் பிடித்துள்ளது. இந்த கட்சியின் 2022-2023ம் ஆண்டு வருமானம் ரூ.737.67கோடியாகும்.

இதற்கு அடுத்த இடத்தில் ரூ.333.45கோடியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. இதேபோல் அதிக செலவு செய்த கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. இந்த கட்சி ரூ.181.18 கோடியை செலவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ரூ.79.32 கோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ரூ.57.47 கோடியுடன் பிஆர்எஸ் உள்ளன. 39பிராந்திய கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.1740 கோடியாகும்.

 

The post பிராந்திய கட்சிகளின் வருமானத்தில் தெலங்கானாவின் பிஆர்எஸ் முதலிடம்: 2022-2023ம் ஆண்டில் ரூ.737 கோடி நிதி குவிந்தது appeared first on Dinakaran.

Related Stories: