ஜெய்வாபாய் பள்ளியில் வகுப்பறைகளை எம்எல்ஏ ஆய்வு

 

திருப்பூர், ஜூலை 19: திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 9 வகுப்பறைகளை செல்வராஜ் எம்எல்ஏ ஆய்வு செய்தார். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் நபார்டு திட்டத்தின் கீழ் 1.90 லட்சம் மதிப்பீட்டில் 9 வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. இதனை செல்வராஜ் எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார். அப்போது வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பார்வையிட்டார்.

மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் பள்ளியில் வேறு ஏதேனும் தேவை உள்ளதா? என்பது குறித்தும், பள்ளியில் மாணவிகள் சேர்க்கை விகிதம் மற்றும் அரசு வழங்குகிற சலுகைகள் மாணவிகளுக்கு சென்றடைகிறதா? என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதில் கவுன்சிலர் திவாகரன், பகுதி செயலாளர்கள் மியாமி ஐயப்பன், மு.க.உசேன், டிஜிட்டல் சேகர், வழக்கறிஞர் அணி நந்தினி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜெய்வாபாய் பள்ளியில் வகுப்பறைகளை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: