கோவை, ஜூலை 19: கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி 26-வது வார்டு செங்காளியப்பன் நகர் சாலை முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. கண்ணையா லேஅவுட் செங்காளியப்பன் நகர் சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தால் தார்ச்சாலை தோண்டி போடப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகிறது. பயனீர் மில் ரோடு ஐயப்பன் கோவில் எதிர்புறம் தார்ச்சாலை உடைந்து நொறுங்கி கிடக்கிறது. இவை அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டுகிறேன்.
வஉசி காலனி, சிஎம்சி காலனி, எல்லைத்தோட்டம் 9வது வீதி, ராயப்பன் வீதி, முல்லை நகர், துலாக் வெங்கடசாமி நாயுடு வீதி ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் தண்ணீர் வசதி இல்லை. இதை, சீர்செய்ய வேண்டும். எல்லைத்தோட்டம் ரோடு பாலகுரு கார்டன் செல்லும் பாதையில் 100 மீட்டருக்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை அகற்ற வேண்டும். ஸ்ரீராம் நகர், ஹட்கோ காலனி பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் அடைத்து, சாக்கடை நீர் வெளியே போக முடியாத அளவில் உள்ளது. இதை, தூர்வார வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
The post மாநகராட்சி 26-வது வார்டில் தார்ச்சாலை அமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.