தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 

ராமநாதபுரம், ஜூலை 18: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ராம.காசிநாத துரை வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினரான உதவி ஆட்சியர் முகமது இர்ஃபான் பேசும்போது, ”சிந்தனையில் சிதைவின்றி, முயற்சியில் சோர்வின்றி, எண்ணிய செயல்களை மட்டும் எண்ணத்தில் கொண்டு திண்ணிய முயற்சிகளை தெளிவாக செயல்படுத்தினால், இந்திய ஆட்சி பணி தேர்வு என்பது எவருக்கும் எளிது” என்பதனை தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டனர். இறுதியில் முனைவர் ஆதிதாஸ் நன்றி கூறினார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.

The post தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: