இந்த தகவலறிந்த கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் நேற்று ஜி.டி வேர்ல்ட் மால் வாசலில் போராட்டம் நடத்தினர். வேஷ்டி கட்டி வந்ததற்காக விவசாயியை மாலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக மால் நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேட்டி, லுங்கி அணிந்து வந்திருந்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பகீரப்பா, கிராமத்திலிருந்து வேட்டி கட்டிவரும் மக்கள் ஒரு படம் பார்ப்பதற்காக திரும்ப ஊருக்குச் சென்று பேண்ட் அணிந்துகொண்டா வரவா முடியும்? என தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், வேட்டி அணிந்து வந்த விவசாயியை மாலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post பெங்களூருவில் வேட்டி அணிந்து வந்த முதியவருக்கு மாலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.