மின் கட்டண உயர்வு ஒன்றிய அரசை கண்டித்து 25ம்தேதி ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை வகித்தார். கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டுஎண் உயர்வுக்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில், உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெற்றுத் தர சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக காவல்துறை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மின் கட்டண உயர்வு ஒன்றிய அரசை கண்டித்து 25ம்தேதி ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: