அஸ்ஸாமில் ஓடும் ரயிலின் எஞ்சின் கழன்று ஓடியதால் பரபரப்பு: நல்வாய்ப்பாக பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரில் ஓடும் ரயில் எஞ்ஜின் பிரிந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திப்ருகார் – கொல்கத்தா இடையே தினசரி இயக்கப்படும் கம்ருத் விரைவு ரயில் பனிப்பூரில் உள்ள நியூ திப்ருகார் ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 7.30 மணியளவில் திடீரென்று ரயிலின் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்றன.

ரயில் ஓடி கொண்டிருந்தபோது பெட்டிகள் உடனான இணைப்பில் இருந்து எஞ்ஜின் பிரிந்து சென்றதால் எஞ்ஜின் இல்லாமல் சிறிது தொலைவுக்கு பெட்டிகள் ஓடி நின்றன. நல்வாய்ப்பாக பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பிரிந்து சென்ற எஞ்ஜினும் சிறிது தொலைவில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள் எஞ்ஜினை பெட்டிகளுடன் இணைத்து கொல்கத்தாவுக்கு ரயிலை அனுப்பி வைத்தனர். ஓடும் ரயிலில் எஞ்ஜின் பிரிந்து சென்றதால் ரயிலில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

The post அஸ்ஸாமில் ஓடும் ரயிலின் எஞ்சின் கழன்று ஓடியதால் பரபரப்பு: நல்வாய்ப்பாக பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை appeared first on Dinakaran.

Related Stories: