கிருஷ்ணகிரி, ஜூலை 17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட 96 முகாம்கள் நடத்தி, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் வருகிற 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பட்டி கிராமத்தில் நேற்று நடந்த முகாமினை, மதியழகன் எம்எல்ஏ., தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் தனசேகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெங்கட்டப்பன், துணை அமைப்பாளர்கள் வாசுதேவன், ராதாகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் டாக்டர்.திருவளவன், சண்முகம், கண்மணி, செந்தில்குமார், மாதேஸ்வரன், ராஜசேகரன், வீராசாமி, சென்றாயன், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்டம் appeared first on Dinakaran.