×
Saravana Stores

காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

 

ஓசூர், ஜூலை 17: ஓசூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அரிசி கடத்த பயன்படுத்திய காருடன் 20 மூட்டை அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்ஐக்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார், ஓசூர் அருகே தளி – ஆனேக்கல் ரோடு உச்சனப்பள்ளி முனியப்பன் கோயில் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி ேசாதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ எடைகொண்ட 20 மூட்டைகளில், 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பெங்களுருவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதயைடுத்து அரிசியை கடத்த முயன்ற கிருஷ்ணகிரி மாவட்டம், தளி கும்பார் வீதியை சேர்ந்த டிரைவர் அல்லா பகாஷ் (35) என்பவரை கைது செய்து, காருடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

The post காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri Civil Supplies Crime Investigation Department ,SIs ,Periyasamy ,Dinakaran ,
× RELATED மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர்!!